கலை, கலாசாரம், அரசியல், வரலாறு, பூகோள ரீதியாக உலக வரலாற்றில் இந்தியா பெற்றிருக்கும் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதற்குக் காரணம் - மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மக்களைக் காத்த அரசர்களும், இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய காலத்தில் மக்களை வழிநடத்திச் சென்ற தலைவர்களும்தான்! ஒரு நாட்டுக்கும் சரி, ஒ..
‘வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்...’ என்ற முதுமொழிக்கு ஏற்ப வீட்டைக் கட்டி, அதில் குடிபுகுவது என்பது இருபத்தோராம் நூற்றாண்டில் பலருக்கு வாழ்நாள் கனவாகிவிட்டது. வாடகை வீட்டில் வாழ்ந்த அனுபவத்தோடு ஒருவர் சொந்த வீட்டில் வாழ்கிறார் என்றால் அவருக்கு அதுவே என்றைக்கும் சொர்க்கமாக இருக்கும். ஆம..
எதற்கும் தொடக்கம் என்று ஒன்று உண்டு. அந்த வகையில் சிறப்பான தொடக்கங்கள் பெற்ற பல கண்டுபிடிப்புகள், முதன்முதலாக நடந்தேறிய சம்பவங்கள் ஆகியவை வரலாற்றில் முத்திரை பதித்துள்ளன. முதல் கண்டுபிடிப்புகளிலும், முதல் சம்பவங்களிலும் பல்வேறு சுவாரசியங்கள் பொதிந்திருக்கும். மைக்ரோ ஓவன் கண்டுபிடிக்கப்பட்டதில் பெரும..
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ - என அன்று பாடிய பாரதி இன்று இருந்திருந்தால், பெண் சுதந்திரத்தை, பெண் உரிமையைக் கண்டு ஆனந்தக் கூத்தாடியிருப்பார். அந்தளவுக்கு இன்று எத்துறையிலும் முத்திரை பதிக்கும் வகையில் அறிவிற் சிறந்தோங்கித் திகழ்கிறார்கள் பெண்கள். வீட்டில..
‘‘பாப்லோ நெருடாவின் ‘காண்டே ஜெனரல்’ போல ஒரு வரலாற்றுக் காவியமாக வடிவம் கொள்ள வேண்டிய ஓர் ஆலவித்து இதன் கரு.. இரா.வினோத் என்ற இளம்படைப்பாளியின் மானுட நேயம் ஒரு கவிதை கோலம் கொள்கிற நிகழ்வை நீங்கள் படித்தால் உணர்ந்து கொள்வீர்கள்!’’ - கவிஞர் இன்குலாப், ஊரப்பாக்கம் ‘‘தோட்டக்காட்டீ’யை வாசிக்கும் ஒருவர் இல..
சினிமா வரலாற்றில், உதவி இயக்குநர்களுக்கான ஏடுகளை தவிர்த்துப் பார்க்க முடியாது. அவர்கள், வெள்ளித் திரையின் பின்னணியில் துள்ளித் திரிந்து, உழைப்பை முதலீடாக வைத்து பிழைப்பு நடத்தி, முடிவில் வரவு-செலவு கணக்கைப் பார்க்கும்போதுதான் தெரியும் மிஞ்சியது ஏதும் இல்லை என்று. ஒரு திரைப்படத்தின் தொடக்கம் முதல் அந..
வன்முறையில்தான் நக்ஸல்பாரிகளுக்கு நம்பிக்கை. என்ன செய்வது? ரத்தத்தைக் கண்டு பயப்படுவோரைப் பணியவைக்க அதையே ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ‘நக்ஸல்பாரி தீவிரவாதம்’ பற்றி அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். நக்ஸல்பாரிகளின் தன்மைகள், கோபங்கள், செயல்பாடுகள் பற்றியும், எப்படிப்ப..
தங்கள் கடமைகளைச் செய்வதற்கே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் உள்ள இந்த நாட்டில் ‘அரசியல்வாதிகளாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் அரசியலைத் திருத்த முடியாது’ என்ற வரிகள்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. குடும்ப அரசியல், ‘நட்பு’ அரசியல், வாரிசு அரசியல், சினிமா அரசியல் என்று அத்தனை வகை அரசியல்கள..
சிறுவர்களை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் சுண்டி இழுப்பதில் காமிக்ஸுக்கு நிகர் வேறு இல்லை. ஜப்பானிய மொழியின் வரிவடிவமே சித்திரங்களிலிருந்து வந்ததுதான் என்பார்கள். அதனால்தானோ என்னவோ ஜப்பானில் நூற்றுக்கணக்கான பக்கங்களோடு காமிக்ஸ் தொகுப்புகள் ஏராளமாக வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. காமிக்ஸுக்குக் கிடைக்கு..
பல்லவப் பேரரசின் மன்னர்களில் ஒருவனான பரமேஸ்வர வர்மன், வாரிசு ஏதும் இல்லாமல் மறைந்தான். பின்னர் கிளை வழியில் அந்தப் பேரரசுக்கு தன் பன்னிரண்டு வயதில் மன்னன் ஆன நந்திவர்மனை மையமாகக்கொண்டு புனையப்பட்டுள்ளது இந்தப் புதினம். காஞ்சிபுரத்தைத் தலைமையகமாகக் கொண்டிருந்தாலும், கும்பகோணத்துக்கு அருகில் நந்திபுரத..
உலக அளவில் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிற எளிமையான, இயல்பான, நுட்பமான நகைச்சுவை உணர்வு கொண்ட நாவல்தான் நம்பர் ஒன் லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்ஸி அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதிய முதல் படைப்பு! இந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டு, அவள் விகடனில் தொடர்கதையாக வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்..
இன்றைய வாழ்க்கை முறையில் நமது உணவுப் பழக்கவழக்கம், சுற்றுப்புறச் சூழல் அவசரகதியான செயல்பாடுகளால் பலவிதமான உடல்நல பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. பரம்பரையாக மட்டுமே சில நோய்கள் வரக்கூடும் என்ற நிலைகளைக் கடந்து, இப்போது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த நோயும் பாதிக்கக் கூடும..