இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரா..
காணி நிலம் இருந்தாலே போதும், கணக்கு பார்க்காமல் உழைத்து அந்த நிலத்தை பசுமையாக்கிப் பார்த்து பரவசமடைந்த விவசாயிகள் இப்போது இல்லை. நகரமயமாதலும், நூறு நாள் வேலையும் விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக்கொண்டுவிட்டன. தன் சொந்த நிலத்தில்கூட உழைக்க மறந்து பாதை மாறிவிட்டனர். அதனால் விவசாயம் செய்ய ஆளி..
உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு கிடைப்பது மிகச் சிறு பொழுதே. கிடைத்த சிறு பொழுதையும் மகிழ்வாகப் போக்குவதற்காகவே நாடகம், திரைப்படம், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நமக்கு விருந்து படைக்கின்றன. மக்களில் அதிக சதவிகிதம் பேர் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நாடுவது திரைப்படங்கள..
தமிழ் இலக்கியத்தில் சிறுகதைக்கு தனித்த வரவேற்பு உண்டு. சிறுகதை என்பது சுருக்கமான, கதை கூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். தமிழ் வார இதழ்கள் அனைத்தும் சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றன. அந்த அளவுக்கு தமிழ் வாசகர்களிடம் சிறுகதைகளுக்கு வரவேற்பு உள்ளது. பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்... என சிறு..
மனைவி, தாய், மருமகள், அண்ணி, அதிகாரி என்று வீட்டிலும் வெளியிலும் பொறுப்புகளை ஏற்று திறம்படச் செய்பவள் இன்றைய பெண். தன்னை எப்போதும் மலர்ச்சியான தோற்றத்தில் வைத்துக்கொள்வது அவளுக்கு அவசியமான ஒன்று. அதற்கு உதவுவதுதான் இந்தப் புத்தகம். அன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள்களைக் கொண்டு, உடலை ஆரோக்கியமாக..
இயற்கை அளித்த வரங்கள் அனைத்துமே மனித குல நன்மைக்குத்தான். அந்த வகையில் இயற்கை நமக்கு அளித்த கொடை கனி வகைகள். மரங்கள், பூக்கள், பழங்கள் இல்லாத மனித வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா? இவை இல்லாவிட்டால் உயிரினங்கள் இல்லை. ஆம்! மரம் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு நமக்காக ஆக்ஸிஜனை வெளியே வ..
இது அவசர உலகம். அதனால் என்ன என்று கேட்டு விட்டு பறப்பவர்கள் பலர். உடை மாற்றிக் கொண்டே காலை உணவு சாப்பிட்டுக்கொண்டு இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும் என பரபரப்போர் பலர். காலை உணவு என்பதையே மறந்து கருமமே கண் என்று தங்கள் பணிகளுக்குப் பாய்ந்தோடுவோர் பலர். வெறும் வயிறோடு பள்ளிக்கூட வாசல் நோக்கி ஓடும் ..
‘ஷீர்டி’ என்ற பெயரைக் கேட்டதும் ஆன்மிக அன்பர்களின் உள்ளத்தில் சாய்பாபாவின் அருளுருவம் தோன்றும். அனைத்து மக்களும் சென்று வழிபடும் புண்ணியத் தலமாக விளங்கிக்கொண்டிருக்கும் ஷீர்டி, மதநல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் விளங்கிக்கொண்டிருக்கிறது. சாய்பாபா மனிதரா, துறவியா, மகானா என்றால், இது அத்தனையும்தான..
தலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மனிதர்களுக்கு இடையே வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் விரிவடையத்தான் செய்கின்றன. ஆனாலும், எந்தச் சூழலிலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும்..
இசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சாத மன வல்லமையைத் தருவது. பக்தி, வாழ்வில் எதற்காக வேண்டும்? மன நிம்மதிக்குத்தான். சொல்லப்போனால் இந்த நிம்மதியைப் பெறத்தான் மானு..
‘‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’’ - முண்டாசுக் கவிஞன் பாரதி அன்றே வைத்த கோரிக்கை இது. இறவாத புகழுடைய பாரதி கவிதைகளின் முழுத் தொகுப்பே இந்த நூல். தமிழ் மொழியின் தனிநிகர் அடையாளமான பாரதி பக்தி, காதல், கம்பீ..