இந்த பிரபஞ்சத்தைப் போலவே மனிதனின் உடலுக்குள் எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளன. மனசு நினைக்கும் செயலை செய்து முடிப்பது உடலில் உள்ள உறுப்புக்கள்! அந்த உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விஷயத்தை ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தியபடியேதான் இருக்கிறது. அந்த உடல் மொழியை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பதுதான்..
ஏழை பங்காளன், நாடிவந்தவர்க்கு நன்மைகள் பல செய்தவர், தனது நற்சிந்தனைகளாலும், பழக்கவழக்கங்களாலும் ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதைத் திரைப்படங்கள் மூலமும், நிஜ வாழ்விலும் வாழ்ந்து காட்டிய வள்ளல் என எம்.ஜி.ஆர். என்கிற வார்த்தைக்கான வடிவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர். காலத்தில்..
மனதிடம் மண்டியிடுவதும் அதையே மண்டியிடச் செய்வதும் அவரவரின் செயல்முறைகளைப் பொறுத்ததே. வாழ்க்கை ஓட்டத்தில் அவ்வப்போது வரும் தோல்வியைத் துடைத்து எடுத்து சிகரத்தில் ஏற முயற்சிப்பதுதான் மனித மனத்தின் மங்காத இயல்பு. ஆனால், ‘பை நிறைய பணம்; மனிதம் இல்லா குணம்’ என நகர்ந்துகொண்டு இருக்கும் இன்றைய வாழ்க்கை முற..
‘‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்... இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்!’’ - குடிவாழ்வின் உண்மைச் சாட்சியமாக கண்ணதாசன் எழுதிவைத்த வரிகள் இவை. குடிப் பிரச்னையில் இருந்து மீள்வது பல நேரங்களில் சாத்தியமற்றதாகத்தான் இருக்கிறது. ‘இன்றையில் இருந்து குடிக்க மாட்டேன்; வ..
தாய்க்கும் மகளுக்குமான உறவை வார்த்தைகளால் விவரிக்க முடியாததுதான். ஆனால் தாய்க்கும் குழந்தைக்குமான உறவை, பிணைப்பை, நேசத்தை தாய்மொழியாகிய தமிழ்மொழியால் முழுமையாக சித்தரிக்கமுடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். ஒரு பெண் தாய்மை அடைந்த நிலையை உணர்ந்தபோது அது தன் கருவுக்குள் சிசுவாகி வளர்ந்து, பிறந்து அ..
சிலருடைய எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லிவிளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும். கதகதப்பான சாம்பலில் இருந்து எழ மனமே இல்லாமல் எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துக்களின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும். எழுதிக் குவிக்கும் இயந்திரத்தனத்தில் இத்தகை..
சிறுவர்களின் உலகில் இன்றியமையாத ஒன்று காமிக்ஸ்! தமிழில் நேரடி காமிக்ஸ் இல்லையே... என்கிற குறையைத் தீர்த்துவைக்கும் விதமாக, சுட்டி விகடன் தொடங்கிய முயற்சியின் விளைவு இந்த காமிக்ஸ். அதிரடியாக வெளிவந்த வண்ணமயமான காமிக்ஸ் பக்கங்கள், சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் ஈர்த்து, ரசிக்கவைத்தன. மேற்கத..
இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மருந்துகளோ பக்கவிளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. மரபு வழி மருத்துவம் பக்கவிளைவை ஏற்படுத்துவதில்லை. இதனால், சமீபகாலமாக மரபு வழி மருத்..
பூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக Ôமரம்Õ என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனித இனம் ஒரு நிமிடம்கூட நீடிக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், மரங்களை காட்டுத்தனமாக வெ..
வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயர..
இன்று மருத்துவமனைக்குச் சென்றால் வலிக்காமல் பரிசோதனை செய்துகொள்ளலாம், அல்லது வலி இன்றி அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். இது எப்படி சாத்தியமாயிற்று? வலியைத் தீர்க்கும் மருந்துகளும் மயக்க மருந்தும் இல்லாத பரிசோதனையையும் சிகிச்சையையும் கற்பனை செய்து பாருங்கள். எவ்வளவு துன்பம் நிறைந்ததாக இருக்கும்! இத்தன..