தற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பி உண்ணக்கூடிய அவசர அடியில் சமைத்த உணவுகள், 2 மினிட்ஸ் உணவுகள் என சிறுவர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் உணவு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இப்போது பெர..
இன்று உள்ளங்கைக்குள் உலகம் வந்து விட்டது. ஆனால், மனித இதயத்துக்குள்தான் தியாக உணர்வு அருகிவிட்டது. தேசிய உணர்வையும், சமூக ஒற்றுமை உணர்வையும் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லி, வழிநடத்தும் போக்கு குறைந்து வருகிறது. இந்த தேசத்துக்காக _ இந்த நாட்டு மக்களுக்காக தங்கள் பெற்றோர், மனைவி, பிள்ளைகளைப் பி..
இந்தியாவின் ஆதி மருத்துவம் சித்த வைத்தியம், ஆதி மருத்துவன் சித்தன். மலைகள் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் வசித்தார்கள். சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் அல்ல; இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். மலைகள் இறைவன் உறையும் இல்லங்கள் என்கின்றனர் மெய்யறிவாளர்கள். அவை..
கவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழுத முடியும். ஒன்று அனுபவத்தின் வாயிலாகத் துய்த்துணர்ந்து எழுதுவது. மற்றொன்று கற்பனையைக் கொண்டு அனுபவத்தைச் செப்பனிடுவது. இந்த இரண்டு முறைகளுமே தமிழ்க் ..
வாழ்வின் இன்பமான தருணங்களை இளமைக்குள் ஊடுருவி, இந்த நூலை உயிர்ப்போடு தருவித்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. பழுத்த முனிவர்போல் தேகங்களின் விளையாட்டுகளை கலை நயத்தோடு கடலின் ஆழத்துக்கும், வானின் உயரத்துக்கும் பயணித்து மிக நாகரிகமாக தந்திருக்கிறது இவரது தமிழ். இவருடைய சிந்தனா சக்தியும், படிம உவமானங்களும்..
‘எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக்கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்' எனும் ஞான உரை கூறிய காஞ்சி மகா பெரியவர், தன் வாழ்நாள் முழுதும் தவ வாழ்வு வாழ்ந்து அறநெறிகளையும் அருளுரைகளையும் வழங்கியவர். துறவு என்ற சொல்லின் வடிவமாக வாழ்ந்த ஞானத் துறவி அவர். பால பருவத்தில..
ஒரு மனிதன் தன் உயிரைக் காப்பாற்றும் மருத்துவரை கடவுளாகப் பார்க்கிறான். உயிர் காக்கும் உன்னதப் பணி, வணிக நோக்கமாகிவிட்ட இன்றைய மருத்துவ உலகில் சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நோய்களைக் கண்டறியும் முனைப்புடன்; நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் அறிவுடன்; நோயை மேலும் ..
‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்!’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது. ஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், ..
எத்தனை பெரிய உயர் பதவியும் மக்களாட்சியில் மக்களுக்காகப் பணியாற்றக் கொடுக்கப்படுவதுதான். மாவட்ட ஆட்சியர் பணி என்பது ராஜபாட்டையில் கம்பீரமாகப் போவதல்ல; மக்களின் குறைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவர்களின் முகங்களை மலரவைப்பதற்கான பணியாகும் என்று நன்கு உணர்ந்தவர் உதயச்சந்திரன் என்பதை, அவரின் பணி அனுபவங்க..
இருபது வயதை எட்டிப் பிடிக்காத வயதில் ராஜ்யத்தை ஆளவந்த மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் அக்பரின் புற வாழ்வும், அக வாழ்வும் சதிவலைகளால் பின்னப்பட்டவை. சுற்றிலும் சூழ்ச்சிச் சுற்றங்கள். அவர்களுக்கு அடிபணியும் அலுவலர்கள். தன் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்யப் போதுமான அறிவைத் தேடிக்கொண்டு, சூழ்ச்சிகளைச் ..
கிராமங்கள் இயற்கை எழில் வாய்ந்தவை. ஆறுகள், ஓடைகள், குளங்கள், குன்றுகள், குறுங்காடுகள், பச்சை வயல்கள், மரம், செடி, கொடிகள் சூழ்ந்து, ஒரு பிரதேசத்தின் பசுமையான முகவரியாகத் திகழ்கிறது. கிராம மக்கள் சூட்சுமம் இல்லாதவர்கள். வெளிப்படையாக, எளிமையாக விளங்குபவர்கள். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தில், இளம் பருவத்த..
மக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனின். அவருடைய வீரமிகு வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பான சுவாரஸ்யம் மிகுந்த எளிய நடையில் சொல்கிறது இந்த நூல். உலக சித்தாந்தத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, பரந..