Menu
Your Cart

விலகிச் செல்லும் பருவம்

விலகிச் செல்லும் பருவம்
-5 %
விலகிச் செல்லும் பருவம்
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
செந்தில்குமாரின் கதைவெளி நுட்பமானது. வாழ்வின் எல்லா ரகசியங்களையும் தமக்குள் ஒளித்து வைத்துக்கொண்டிருப்பவை அவரது பாத்திரங்கள். அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளும் வேட்கையே அவரது படைப்புச் செயல். வாழ்வை அதன் கடைசித் துளிவரைப் பருகத் துடிக்கும் தன் பாத்திரங்களை அமைதியாகப் பின்தொடர்ந்து செல்லும் செந்தில்குமார் ஒருபோதும் அவற்றின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை. வாழ்வின் சுமை தாளாத தருணங்களில் அவை விடும் பெருமூச்சுகளை, ரகசியமான புணர்ச்சிகளின்போது அவை கசிய விடும் வியர்வைத் துளிகளை, கொடிய வன்முறைகளுக்குள்ளாகிப் பெற்றுள்ள காயங்களிலிருந்து பெருகும் குருதியை, வதைபடும் ஆன்மாவிலிருந்து சொட்டும் கண்ணீர்த்துளிகளைச் சேகரித்துப் பத்திரப்படுத்தி எடுத்து வந்துவிடுகிறார் செந்தில்குமார். தன் அறிதலை மிகத் தணிந்த குரலில் வாசகனிடம் பகிர்ந்துகொள்ளும் முனைப்பே அவரது படைப்புச் செயல்பாடு. எளிய வெதுவெதுப்பான சொற்களால் வாசிப்பனுபவத்தைத் திணறலாக மாற்றும் வித்தை அவருக்குக் கைகூடியிருப்பதன் ரகசியம் இதுவே.
Book Details
Book Title விலகிச் செல்லும் பருவம் (Vilagi Sellum Paruvam)
Author எஸ்.செந்தில்குமார் (S.Senthilkumar)
ISBN 9788189945893
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 144
Published On Nov 2008
Year 2009
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ் வாழ்க்கையின் வினோதமான, உலர்ந்த பக்கங்களை எழுதிச் செல்லும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் எஸ்.செந்தில்குமார் தனித்த அடையாளம் கொண்டவர். கதையின் உள் மடிப்புகளைக் கலைத்து விரித்துக்கொண்டே செல்லும் இவரது மொழி இடையறாத வளையங்கள் உருவாகும் நீர்ப் பரப்பாக மாறிவிடுகிறது. அதனால் கதைகள் தாம் துவங்கிய திடப்..
₹71 ₹75
கழுதைகள் மேடேற மேடேற முதுகிலிருந்த சுமை நழுவிப் புட்டத்துப் பக்கமாகச் சரிந்தது. கீழே தவறிவிழாமல் ‘நெஞ்சுக்கவுறுகட்டு’ பிடித்து நிறுத்தியது. கழுத்தோடு சேர்ந்து கட்டிய நெஞ்சுக்கவுறுகட்டு உயிர்போகிறதுபோல, அழுத்திப்பிடித்தது. கழுதைகள் வலியோடு மலையேறின. புட்டத்துப் புண்ணின் மேல் விழுந்த கயிறுகட்டு அழுத்த..
₹356 ₹375
ஏன் சிறுகதை எழுத வேண்டும்? ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்? சிறுகதையின் அரசியல் என்ன? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் தமிழ் இலக்கியம் கற்று வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக அல்லது நவீன இளம் தலைமுறை சிறுகதைப் படைப்பாளர்களும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு இந்நூல் புதிய அர்த..
₹314 ₹330