- Edition: 1
- Year: 2016
- Page: 168
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நீர்
கணவன் மனைவி
ஆனந்தமான குடும்ப வாழ்க்கை கடினமே இல்லை.அடிப்படையான சில விஷயங்களை மனதில் கொண்டால் .குடும்ப வாழ்க்கையில் கடைசிவரை அன்பான வாழ்க்கை வாழ முடியும்.சூட்சுமங்கள் என்ன என்பதில் தான் பலருக்கும் குழப்பம்.குடும்ப வாழ்க்கை எனும் பயணத்தில் என்னென்ன விஷயங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை இந்த நூல் எளிமையக விளக்குகிறது. “வெற்றிமணி”இதழ் மூலமாக,ஜெர்மனியிலும்,லண்டனிலும் வெளியாகி மிகப்பெரிய உவரவேற்பைப் பெற்ற “நல்ல தம்பதியராய் வாழ்வது எப்படி”எனும் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.இந்த நூல் தம்பதியருக்கு இடையேயான சிக்கல்களைச் சரி செய்யவும், ஆரோகியமான குடும்ப வாழ்க்கையைக் கட்டியெழுப்பவும் நிச்சயம் உதவும்.
மண முறிவுகளாலும்,உறவுச் சிக்கள்களாலும் தள்ளாடிக் கொண்டிருக்கும் இன்றையச் சமூகத்திற்கு மிகவும் அவசியமான நூல் இது.
இது ஒரு விதை.இது தம்பதியரிடையே விதைக்கப்பட்டு,குடும்பங்களில் முளைக்கும்போது,சமூக வீதிகளில் ஆனந்தப் பூக்கள் நிச்சயம் சொரியும்.
லண்டன் மற்றும் ஜெர்மனியில் வெளியாகும் வெற்றிமணியில் சேவியரின் ‘நல்ல தம்பதியராய் வாழ்வது எப்படி’ தொடர் வந்தபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.வாசகர்களின் கடிதங்களும்,மின்னஞ்சல்களும்,அழைப்புகளும் அந்தத் தொடருக்குக் கிடைத்த ஏகோபித்த வரவேற்பைப் பறைசாற்றின.மக்கள் அந்தத் தொடரைக் காத்திருந்து வாசித்தனர்.ஆயிரக்கணக்கான தம்பதியருக்கு மிகவும் பயனளித்த அந்தக் கட்டுரைகளின் தொகுப்பாக வருவது மனதுக்கு மகிழ்ச்சியான செய்தி.ஆனந்தமான குடும்ப வாழ்க்கையை விரும்பும் ஒவ்வொரு தம்பதியரும் படிக்க வேண்டிய கட்டுரைகள் இவை
Book Details | |
Book Title | கணவன் மனைவி (kanavan manaivi) |
Author | சேவியர் (seviyar) |
Publisher | நீர் (water) |
Pages | 168 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |