Menu
Your Cart

நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?

நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?
-5 %
நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?
உமா பார்வதி (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு வாசக மனம் உணர்ந்து கொள்ளும் வகையில் படைப்புக்கள் மூலம் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறேன். மலர்ந்து மலர்ந்து உதிர்ந்தவையும், உதிர்ந்து உதிர்ந்து மலர்ந்தவையுமான கனவுகளும், கற்பனைகளும் எனது கதைகள் மற்றும் கவிதைகளிலே இருக்கின்றன. மழையாய் நானே பொழிந்து , மழையில் நானே கரைபவளாகிறேன். மின்னல் தெறிப்பு, இடி,முழக்கத்துடன் புறப்படும் ஆர்ப்பாட்டமின்மை எனது இயல்பு. என் படைப்புக்களிலும் அவை பிரதிபலிக்கின்றன. வீடு, அலுவலகம், பயணம், சில சமயங்களில் ஓட்டம் என்ற அவசர வாழ்க்கையின் நடுவே ஒரு குளிர்க் காற்றாக முகத்தில் வந்து மோதியவை எந்தக் கதைகள். மனதில் அந்தக் கணத்தில் எழுதிய பல வரிகள் தாளில் நழுவிப் போயிருக்கின்றன. எனினும் சளைக்காமல் நான் பின் தொடர்ந்து ஓடிய தும்பிகளையும், வண்ணத்துப் பூச்சிகளையும் சில தருணங்களுக்குள் பிடித்து வந்திருக்கிறேன். விரல் நகத்தின் மென்சூடும், எரிமலையின் குழம்பும், அக்னியின் இருவகைத் தோற்றப்பாடுகள் என்பதை நான் எப்போதும் ஞாபகம் கொள்கிறேன். இப்படித்தான் எழுதவேண்டும் என்று நான் ஒரு போதும் திட்டமிட்டு வரையறை செய்து கொண்டு எழுதுபவள் அல்ல. அதே போல் எந்த சித்தாந்தத்துக்கும், கொள்கைப் பிரகடனத்துக்கும், பிரசாரத்துக்கும் உரிய ஓர் இலக்கிய வடிவமாக நான் கவிதையைக் கருதுவதில்லை. அவரவர் பரவசத்திலும் அல்லது வலியிலும் இருந்தே அவரவர் எழுத்துக்கள் பிறக்கின்றன. உண்மைகளை உரக்க பேசும், சத்தியத்தைக் கோரும் ஓர் உலகத்திலிருந்து என் கதைகள் பிறக்கின்றன.
Book Details
Book Title நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை? (Naam Yen Antha Theneerai Parugavillai)
Author உமா பார்வதி (Umaa Paarvadhi)
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 0
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இகழ் அல்லது புகழ், காற்றில் அந்த வார்த்தைகள் கரைந்து போன பின் எதுநிற்கும்? எது தொடரும்? ஒரு கலைஞனுக்கு பாராட்டும் கைதட்டலும் தான்உணவு போன்றது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தேன்.நிச்சயம் அதில்லை என்று பின்னர் புரிந்துவிட்டது ஆரா. அவன் விட்டுப்போகும் படைப்புக்கள் எங்காவது ஒரு இருட்டு மூலையி..
₹114 ₹120