-5 %
இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்: ஜெயமோகனின் கலாச்சார அரசியல்
₹722
₹760
- Edition: 1
- Year: 2021
- Page: 717
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: கருப்பு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஜெயமோகனின் எழுத்துக்கள் பெரும்பாலும் இடதுசாரி ஆளுமைகளின் மீதான அவதூறுகளும் அவமதிப்புகளும் நிறைந்தவை. அவருடைய எழுத்துகளில் ஆய்வு முறையியலையோ, கோட்பாடுகளையோ, அடிக்குறிப்புகளையோ காணமுடியாது. ஆதிக்க கருத்தாடல்களை மறுக்கட்டுமானம் செய்ய அவர் எப்போதும் முயற்சிக்கிறார்.
தமிழகத்தின் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்காரிய எதிர்ப்பரசியல் மரபின் தொடர்ச்சியாகவும், ஜெயமோகனின் எழுத்துக்கள் மீதான மறுவாசிப்பின் அவசியத்தை உணர்த்துவதாகவும், தமிழ் இலக்கிய சூழலில் இடதுசாரிகள் மேற்கொள்ளும் இடையீடாகவும் இத்தொகுதியில் கட்டுரைகள் இருக்கின்றன.
இலக்கியம், திரைப்படம், மதம், புனைவுகள், கருத்தாக்கங்கள், பாசிச போக்குகள் என ஜெயமோகனின் அனைத்து பரிமாணங்களையும் மேவிய விமர்சனக்கட்டுரைகளின் தொகுதி இது. தூய ஆன்மீக சனாதன அழகியலைப் பேசியபடி விடுதலை அரசியலை வெறுத்த சுத்த இலக்கிய வாதிகளின் மீதான மார்க்சிய அறிஞர் கைலாசபதி மற்றும் தமிழகத்தின் படைப்பாளி தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் மேற்கொண்ட காத்திரமான விமர்சன எழுத்து மரபின் தொடர்ச்சி இத்தொகுதி.
Book Details | |
Book Title | இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்: ஜெயமோகனின் கலாச்சார அரசியல் (Indhuthuva pasisathin ilakkiya mugam) |
Compiler | பா.பிரபாகரன் (Paa.Pirapaakaran), யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran) |
Publisher | கருப்பு (Karuppu) |
Pages | 717 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம் |