Menu
Your Cart

யவனி

யவனி
-5 %
யவனி
தேவி யசோதரன் (ஆசிரியர்), சத்தியப்பிரியன் (தமிழில்)
₹399
₹420
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்தப் புதிய நாவலும் உங்களுக்குப் பிடித்துவிடும். முழுக்க வாசித்து முடித்தபிறகும் மீண்டுமொருமுறை, இன்னுமொருமுறை என்று வாசிக்கத் தூண்டும். சோழர் காலப் பின்னணியில் விரியும் பிரமாண்டமான இந்தப் புதினத்தை வாசிக்கும்போது திரைப்படம் போல் காட்சிகள் மனக்கண்ணில் விரிகின்றன. ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் அரசியலை, வரலாற்றை, வாழ்க்கை முறையை, போராட்டத்தை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் தேவி யசோதரன். வீரத்துக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகத் திகழும் யவனியின் சாகசங்கள் நம் நினைவுகளில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. நேசம், காதல், பகை, சூது, வன்மம், போராட்டம் என்று கடல் அலைகளுக்குப் போட்டியாகப் பொங்கும் உணர்ச்சிகள் இந்நாவலை மறக்கமுடியாத ஒரு பேரனுபவமாக உயர்த்திவிட்டன. ஆங்கிலத்தில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த ‘எம்பயர்’ நாவலின் அதிகாரபூர்வமான மொழியாக்கம்.
Book Details
Book Title யவனி (Yavani)
Author தேவி யசோதரன் (Thevi Yasodharan)
Translator சத்தியப்பிரியன் (Saththiyappiriyan)
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 456
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் வாழ்வில் கலந்த இரட்டைக் காப்பியங்கள். மணிமேகலை கூறும் தத்துவக் கூறுகளும் வாழ்வியல் கருத்துகளும் அறம் தொடர்பான நிலைப்பாடுகளும் மிக முக்கியமானவை. காதல் வாழ்க்கைக்கும் துறவு வாழ்க்கைக்கும் இடையேயான அத்தனை முரண்பாடுகளையும் மணிமேகலை போல அலசும் பிறிதொரு நூல் இல்லை ..
₹247 ₹260
தமிழின் முதன்மைக் காப்பியமான சிலப்பதிகாரம் தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. இன்று வரை கண்ணகி தமிழர்களின் தாய்த் தெய்வமாக, கொற்றவையாகப் போற்றப்படுகிறாள். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைப் பொக்கிஷம். சிலப்பதிகாரத்தை நாவல் வடிவில் சொல்கிறது இந்தப் புத்தகம். சிலப்பதிகாரம் த..
₹295 ₹310