Menu
Your Cart

என் பெயர் சிவப்பு | My Name Is Red

என் பெயர் சிவப்பு | My Name Is Red
--8 %
என் பெயர் சிவப்பு | My Name Is Red
ஓரான் பாமுக் (ஆசிரியர்), ஜி.குப்புசாமி (தமிழில்)
₹808
₹750
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகையில் மலரை உருவாக்கும் பொறுப்பை இஸ்தான்புல்லின் நுண்ணோவியர்களிடம் ஒப்படைக்கிறார். நூலாக்கம் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் இரண்டு நுண்ணோவியர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்துக் கொல்லப்படுகிறார்கள். முதலில் மெருகோவியன் வசீகரன் எஃபெண்டி. பின்னர் நூலுரு வாக்கத்துக்குப் பொறுப்பாளரான எனிஷ்டே. அவர்களைக் கொன்றது யார்? கொலைக்குக் காரணம் என்ன? என்ற கேள்விகளிலிருந்து விரிகிறது நாவல். பன்னிரண்டு கதாபாத்திரங்களின் மொழிகளில் முன்னேறுகிறது ‘கதை’. நாவலின் இரு புள்ளிகள் காதலும் குற்றமும். இவற்றை இணைக்கும் கதைக் கோட்டுக்கு மேலும் கீழுமாக மதத்தின் கட்டுப்பாடுகளையும் கலையின் சுதந்திரத்தையும் விவாதிக்கிறார் ஓரான் பாமுக். ‘என் பெயர் சிவப்பு’-2006ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் தமிழில் வெளிவரும் முதல் படைப்பு.
Book Details
Book Title என் பெயர் சிவப்பு | My Name Is Red (Yen Peyar Sivappu)
Author ஓரான் பாமுக் (Oran Pamuk)
Translator ஜி.குப்புசாமி (Ji.Kuppusaami)
ISBN 9788189359928
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 664
Published On Feb 2009
Year 2009
Edition 4
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha