
-5 %
வெளியேற்றம் (HB)
யுவன் சந்திரசேகர் (ஆசிரியர்)
₹808
₹850
- Edition: 1
- Year: 2023
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுதந்திரமான வெளியில், வேர் பிடிக்காமல் அலைகிற தனிமனிதனாக என்னை வனைந்துகொள்ளும் பகற்கனவுகள் வெகுகாலம் என்னுடன் இருந்தன. திருமணம் ஆகி, மனதிற்குகந்த மனைவியும் குழந்தைகளும் அமைந்தபிறகு மேற்படிக் கனவுகள் வெளிற ஆரம்பித்துவிட்டன. என்றாலும், வெளியேறியவர்களாகத் தென்படுகிறவர்களை வேடிக்கை பார்ப்பதும், அந்த நேரத்தில் மன ஆழத்தில் ஏற்படும் சிறு நமைச்சலை ஆனந்தமாய் உணர்வதும் நின்றபாடில்லை.
தனியர்களாகத் திரியும் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறேன். வெளிமாநிலப் பிரயாணங்களில், அத்துவான நெடுஞ்சாலைகளில், பித்தர்கள்போல நடந்துகொண்டேயிருக்கும் நபர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரேயொரு கணம் அவர்களுடன் என்னைப் பொருத்திப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியும் மிரட்சியும் அடைந்திருக்கிறேன். அந்த ஒரு கணத்தில் காணக் கிடைக்கிற உலகம், பிற வேளைகளில் தென்படுகிற உலகம் அல்ல - பின்னுரையிலிருந்து...
Book Details | |
Book Title | வெளியேற்றம் (HB) (Veliyettram) |
Author | யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar) |
Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Novel | நாவல், 2023 New Arrivals |