Menu
Your Cart

போரிலக்கிய வாசிப்புகள்

போரிலக்கிய வாசிப்புகள்
-5 %
போரிலக்கிய வாசிப்புகள்
அ.ராமசாமி (ஆசிரியர்)
₹437
₹460
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக ஈழ (புலம்பெயர்) எழுத்துகளையும் அதற்கப்பால் மலேசிய, சிங்கப்பூர் கலை, இலக்கிய வெளிப்பாடுகளையும கரிசனையோடு கவனித்து எழுதி வருகிறார். அதற்கு முன்பே அவருக்கு ஈழ அரசியலைப் பற்றிய, ஈழப்போராட்டத்தைப் பற்றிய அவதானமிருந்திருக்கிறது. இதனால் ஈழ அரசியலையும் அதன் வரலாற்றுப் போக்கையும் இலங்கை நிலவரத்தையும் ஆழமாகப் புரிந்தும் வைத்திருக்கிறார். கூடவே, ஈழ நிலப்பரப்பில் தொடர்ச்சியாகப் பயணங்களைச் செய்திருக்கிறார். மட்டுமல்ல, ஈழ அரசியலும் ஈழ அரசியலின் நிமித்தமாகப் புலம்பெயர்ந்தவர்கள் வாழ்கின்ற நாடுகளிலும் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்த மக்களின் வாழ்க்கையை அவதானித்து வருகிறார். இவற்றினடியாகவே அவர் உலகத் தமிழிலக்கிய வரைபடத்தைப் பற்றிச் சிந்திக்கிறார். ஆறாந்திணையாக சேரன் உணர்ந்ததை விரித்து இந்த உலகத் தமிழிலக்கிய வரைபடச் சிந்தனையை அ.ரா முன்வைக்கிறார். இந்த நூலில் இந்தப் பார்வையின் அடிப்படையில் சமகால ஈழ இலக்கியத்தை ஆழ்ந்து நோக்கும் 33 கட்டுரைகள் உள்ளன. ஈழப்போரின் முடிவுக்குப் பிறகு, அந்த அனுபவங்களோடும் அதற்கு முன்னான காலச் சித்திரிப்புகளோடும் எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளைப் பற்றிய விமர்சனங்களும் பார்வைகளும் இவை. இந்த விமர்சனங்கள் தனியே பிரதியை மட்டும் நோக்காமல், அவை எழுதப்பட்ட அல்லது உள்ளடக்கப்பட்டுள்ள அல்லது மையம்கொண்டுள்ள வரலாற்றுப் பின்னணியையும் அதனுடைய உளவியற் கூறுகளையும் விரிந்த தளத்தில் சேர்த்துப் பார்க்கின்றன. இந்தப் பார்வை தவிர்க்க முடியாதது.
Book Details
Book Title போரிலக்கிய வாசிப்புகள் (Perilakiya vaasippukal)
Author அ.ராமசாமி (A. Ramasamy)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில் வெளிவரும் முதல் நாடகம் ‘பிரஹலாதா’. தமிழ் நாடகத்தின் முன்னோடியான தூ.தா. சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை விபரங்கள், அவரது நாடகங்களின் பொது இயல்புகள் போன்ற பல குறிப்புகள் இந்நூலின் ஆய்வு முன்னுரையில் இடம்பெற்றுள்ளன. வாசிப்பு இன்பம் தரும் ஒரு முன்னோடி நாடகம..
₹119 ₹125
தமிழ்த் திரைப்படங்களுக்கு வெகு மக்கள் பத்திரிகைகளில் எழுதப்படும் திரை விமரிசனம் போன்றதல்ல இக் கட்டுரைகள். அப்படி எழுதப்படும் திரை விமரிசனத்திற்கு அந்தப் படத்தின் அதோடு தொடர்புடைய இயக்குநர், நடிகை நடிகையர், இசை அமைப்பாளர் மற்றும் பிற தொழில் நுட்பக் கலைஞர்கள்மீது ஒருவிதக் கரிசனம் உண்டு. அது ஒரு த..
₹133 ₹140