Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம்
-5 %
பத்துப் பதினைந்து கொள்கைத் தீவிரர்கள் ஒருங்கிணைந்து ஆரம்பித்த இயக்கம் அல்ல இது. ஒத்தை ஆசாமி. அசப்பில் தாடி வைத்த தக்காளிப்பழம் மாதிரி இருக்கும் ஷோகோ என்கிற இந்த மனிதர் சைக்கோவா, பைத்தியமா, அரை லூசா, முழுத் தீவிரவாதியா என்று அவர் கைதாகிப் பலவருடங்கள் ஆனபின்பும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எண்பதுக..
₹143 ₹150
ஓரிதழ்ப்பூ
-5 %
யதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையான சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்நாவல் உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக் கொள்ள முடியும். வாசிக்கும் போதே தரையில் கால் ..
₹190 ₹200
ஓவியம் போன்ற எழுத்துகளால் வரையப்பட்ட கோட்டோவியம்
-5 %
இந்தத் தொகுப்பில் உள்ள ஐந்து கதைகளும் நிகழும் களங்கள் Metaphysical என்னும் மெய்யியல் சார்ந்த விழுமியங்கள், தொடர்புகள், மரபு, மொழி, சமுதாயக்களம், மக்கள், நியதிகள் ஆகியவற்றின் இருப்பு சார்ந்த தத்துவங்களும், இயல் அறிவியலும் ஒருங்கே பயணிக்கும் கதைகளாகும். இந்த ஐந்து கதைகளும் Mystic folklore, Mythology, ..
₹162 ₹170
கடசல்
-5 %
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை ம. காமுத்துரையின் எழுத்துச் சிறப்பு, ஆடம்பரங்களற்ற மக்கள் மொழி. வாசிக்கத் தூண்டும் ஈர்ப்புள்ள நடை. மகாராஜன் இஞ்சினியரிங் லேத் அன் வெல்டிங் ஒர்க்ஸ் எனும் சிறிய தொழில் பட்டறையின் கதாபாத்திரங்களைக் கொண்டு புனையப்..
₹333 ₹350
கடலில் எறிந்தவை
-5 %
…அவ்வளவு பதற்றம் நிலவும் நாடு என்பது முதல் பார்வைக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது. தூதரக அதிகாரி ஒருவருடன் காலைச்சிற்றுண்டியோடு பேசிக்கொண் டிருக்கையில், அவர் சொன்னாராம்: இந்த அமைதியின்மையின் பின்புலம், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி அல்ல. உள்நாட்டு நிலவரத்தைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வல்லரசுக..
₹247 ₹260
கடல் கொண்ட நிலம்
-5 %
எனது முதல் கட்டக் கதைகளின் முழுத் தொகுப்பு 2007-ல் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற பன்னிரண்டு கதைகளை, பின்னர் தனித்தொகுப்பாக வெளியிட்டது கிழக்கு பதிப்பகம். இது இரண்டாவது பதிப்பு. தற்போதைய வாசிப்பில், இந்தக் கதைகளின் மையச் சரடாக ஒரு உள்ளோட்டம் தென்படுகிறது - மாயமும் நிஜமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல..
₹276 ₹290
கடவுளுக்குப் பிடித்த தொழில் - அடுத்தத் தலைமுறை மருத்துவம்
-5 %
தகவல் தொழில்நுட்பத் துறையைப் போலவே வேகம் எடுக்கத் தொடங்கியுள்ள துறை உயிரியல் தொழில்நுட்பம். அடுத்த 20-30 ஆண்டுகளில் இதன் மூலம் நாம் அடையப் போகும் பலன்கள் பிரமிக்க வைக்கக் கூடியவை. இந்நூல், உயிரியல் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, இதனைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படை அறிவியலை..
₹266 ₹280
கடவுளும் சைத்தானும்
-5 %
சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பிடுகளோடும் நுண்ணுணர்வுகளோடும் தொடர்புடையவை. குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன...
₹124 ₹130
கடவுளும் நானும்
-5 %
ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விழையும் அ..
₹114 ₹120
கடைசி தேநீர்
-5 %
கடந்த காலத்தின் சில நினைவுகள் உறங்க விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் இந்த எளிய வாழ்வில் எழுத்தின் மூலம் அவற்றை பகிர்ந்து கொள்வதே பெரும் ஆறுதலைத் தருகிறது. ஒன்பது கதைகள் அடங்கிய இத்தொகுப்பை மீண்டும் வாசித்துப் பார்க்கையில் பத்திரிகை துறையில் கடந்து வந்த பாதை, நெருக்கடியான சூழல்கள் நினைவுக்கு வருகின்..
₹181 ₹190
கடைசிப் பக்கங்கள்
-5 %
நற்றிணையில் இப்படி ஒரு காட்சி வருகிறது. தலைவன் தலைவியைச் சந்திக்க அவள் வீட்டுக்கு வருகிறான். தோட்டத்தில் புன்னை மரத்தின் அருகே அவளை அழைத்துச் செல்கிறான். அவளோ “இந்தப் புன்னை மரத்தை என் இளம் வயதிலிருந்து வளர்த்து வருகிறேன். இது என் தங்கை. இங்கே உம்மைச் சந்திப்பது வெட்கமாக இருக்கிறது” என்கிறாள். இப்பட..
₹133 ₹140
கணினி கவனி
-4 %
இன்றைய வாழ்க்கை கம்ப்யூட்டர்களால் நிறைந்திருக்கிறது. நம்முடைய ஒவ்வோர் அசைவையும் அவைதான் தீர்மானிக்கின்றன, வழிநடத்துகின்றன. உண்மையில் கம்ப்யூட்டர் (கணினி) என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? அந்தத் தொழில்நுட்பத்தைச் சுவையான கதை வடிவில் விளக்கும் எளிமையான அறிமுகப் புத்தகம் இது. படியுங்கள், கணினிகளைத..
₹67 ₹70
Showing 241 to 252 of 707 (59 Pages)